பொதட்டூரில் நெசவாளர்கள் உண்ணாவிரதம்
பொதட்டூர்பேட்டை:பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு இல்லை எனக்கூறி நெசவாளர்கள், ஆறு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று, பொதட்டூர்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள், அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.இதில், தலைமையேற்று பேசிய அண்ணா நெசவாளர் சங்க தலைவர் விஜயன் பேசுகையில், ‛தமிழக அரசு உடனடியாக நெசவாளர்களின் அடிப்படை கோாரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெசவாளர்களின் தாக்கம், வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்' என்றார்.