| ADDED : ஜூலை 25, 2024 09:18 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 330 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள், கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். விஷேச நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்குமுன், நேரடியாக கோயம்பேடு சென்று பேருந்து பிடித்து சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். மாதவரம் பேருந்து நிலையம் வந்த பின், இரண்டு பேருந்துகளில் பயணித்து கோயம்பேடு சென்றனர்.தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் மூன்று பேருந்து மாறி செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.எனவே, தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என, தென்மாவட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.