பணிபுரிந்த வீட்டில் கைவரிசை நகை திருடிய பெண் கைது
திருவள்ளூர், திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்தவர் மோகன்ராவ், 34. வியாபாரியான இவரது வீட்டில், அம்சா நகரைச் சேர்ந்த குட்டியம்மாள், 48 என்பவர், ஆறு ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார்.இவர் வராத நாட்களில், இவரது மகள் அனிதா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் எனக்கூறி, ஜனவரி 8ல், குட்டியம்மாள் வேலையை விட்டு நின்று விட்டார்.மோகன்ராவ் மனைவி, பிப்., 23ல், பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தபோது, 15 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் மாயமானது தெரிய வந்தது.இதுகுறித்து, மோகன்ராவ் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். வீட்டில் வேலை செய்த குட்டியம்மாள், நகைகளை திருடியது விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் அடகு வைத்திருந்த, 14 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.கைதான குட்டியம்மாள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.