திருத்தணி முருகன் கோவிலில் 10 மூத்த தம்பதியர் கவுரவிப்பு
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, 10 மூத்த தம்பதியருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், எம்.எல்.ஏ., சந்திரன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறை சார்பில், மூத்த தம்பதியருக்கு, கோவில்கள் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்வு நடத்தப்படும் என, அறநிலையத்துறை அமைச்சர், சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். இத்திட்டத்தில், 10 மூத்த தம்பதியர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு செய்யப்படும் நிகழ்வு காவடி மண்டபத்தில் நடந்தது. கோவில் இணை ஆணையர் ரமணி தலைமை வகித்தார். இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, 10 மூத்த தம்பதியருக்கு மலர் மாலை அணிவித்து, பரிசு பொருட்களை வழங்கினார்.