உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 11 ஊராட்சி செயலர் பணியிடம் காலி திருத்தணியில் வளர்ச்சி பணி பாதிப்பு

11 ஊராட்சி செயலர் பணியிடம் காலி திருத்தணியில் வளர்ச்சி பணி பாதிப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் உள்ள செயலர்களில் கடந்த ஒரண்டாக, 16 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. 11 பேரில் 9 ஊராட்சி செயலர்கள் பதவி உயர்வு பெற்று ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று விட்டனர். மேலும் இரண்டு ஊராட்சி செயலர்கள் உடல்நலக்குறைவால் இறந்து விட்டனர்.இதனால், தாடூர், செருக்கனுார், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே.என். கண்டிகை, வி.கே.ஆர், புரம், பட்டாபிராமபுரம், தரணிவராகபுரம், மத்துார், சின்னகடம்பூர், வேலஞ்சேரி ஆகிய, 11 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊராட்சி செயலர் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை