வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உறுப்பினராக சேர 2 நாள் சிறப்பு முகாம்
திருவள்ளூர்:வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், நலவாரிய உறுப்பினராக சேர இரண்டு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.பொன்னேரி சமூக பாதுகாப்பு திட்டம் - தொழிலாளர் உதவி ஆணையர் செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, 18 - 60 வயதுக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள், தங்களை உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களும், வீட்டு பணியாளர் நலவாரியத்தில், https://tnuwwb.in.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினர்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, திருமணம், மகப்பேறு, இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.வீட்டு பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய, பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் - சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில், வரும் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காலை 10:00 - 5:30 மணி வரை முகாம் நடைபெறும். கூடுதல் தகவல் பெற, 044 - -2797 2221, 2857 0457 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.