உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரம் இல்லாத 20 டன் அரிசி பறிமுதல்

தரம் இல்லாத 20 டன் அரிசி பறிமுதல்

பள்ளிப்பட்டு:தரம் இல்லாத பழுப்பு நிற அரிசி, கோழி தீவனமாக பயன்படுத்த வேண்டிய அரிசி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள அரிசி ஆலைக்கு லாரியில் கொண்ட வரப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.லாரியில் இருந்த 20 டன் அரிசியை பறிமுதல் செய்து, பள்ளிப்பட்டு உணவு பாதுகாப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டுக்கு கொண்டு வந்தது ஏன் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !