திருத்தணியில் ஒரே நாளில் 200 ஜோடிகளுக்கு திருமணம்
திருத்தணி, திருத்தணியில் நேற்று ஒரே நாளில், 200க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமண முகூர்த்தம் நாள் என்பதால், நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவிலில் 70 திருமணங்களும், திருத்தணி பகுதியில் உள்ள மண்டபங்கள் மற்றும் வீடுகளில், 130 திருமணங்கள் நடந்தன. திருத்தணியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. மலைக்கோவிலுக்கு அதிகளவில் வாகனங்கள் வந்ததால், மலைப்பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பொதுவழியில் மூலவரை தரிசனம் செய்ய, இரண்டரை மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று ஒரே நாளில் 73 திருமணங்கள் நடந்தன.