உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு ஊழியர் வீட்டில் 25 சவரன் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் 25 சவரன் திருட்டு

திருத்தணி, வேளாண் துறை அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் நகை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி, ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 56. திருவள்ளூர் வேளாண் துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வேல்முருகன் சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 25 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை