ஜமாபந்தியில் 298 மனுக்கள் ஏற்பு
ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி, கடந்த 20ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் துவங்கியது. தொடர்ந்து, நான்கு நாட்கள் நடைபெற்ற நிலையில், இலவச வீட்டுமனை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 298 மனுக்கள் வழங்கப்பட்டன.தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள், பல்வேறு சான்றுகள் கேட்டு வந்து செல்கின்றனர். கோடை காலம் துவங்கிய நிலையில், இங்கு தாகம் தீர்க்க தண்ணீர் கேன் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தண்ணீர் தான் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். எனவே, குடிநீர் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.