உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

திருத்தணி:ஆர்.கே.பேட்டை அடுத்த மரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 36. இவர் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள சிவசக்தி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, சங்கர் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, மூன்று மர்ம நபர்கள் மதுபோதையில் வந்து, ஊழியர் சங்கரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகார்படி திருத்தணி போலீசார் வழக்குப்பதிந்து, பெட்ரோல் பங்கில் பதிவான 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். ஊழியர் சங்கரை தாக்கியவர்கள் செருக்கனுார் காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 41, எஸ்.அக்ரஹாரம் காலனியை சேர்ந்த ரஜினி, 44, பெருமாள், 45 என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி