மேலும் செய்திகள்
கடலுாரில் குட்கா விற்ற 7 கடைகளுக்கு அபராதம்
13-Sep-2025
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், நான்கு மாதங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 1.17 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,314 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 469 வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைத்தனர். தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கட்டுப் படுத்த, தமிழக அரசின் உத்தரவின்படி, திரு வள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர்கள் மற்றும் காவல் துறை அடங்கிய குழுக்கள், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை களில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை - செப்டம்பர் மாதம் வரை, நான்கு மாதங்களில், 17,281 கடைகளில் ஆய்வு செய்து, 478 கடைகளில், 19 லட்சத்து 90,903 ரூபாய் மதிப்புள்ள, 3,314 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 469 கடைகளுக்கு 'சீல்' வைத்து, 1 கோடியே 17 லட்சத்து 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இனி வரும் காலங்களில் குட்கா பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
13-Sep-2025