மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் மக்கள் பிடித்து ஒப்படைப்பு
11-Dec-2024
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான போலீசார் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடி அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த நான்கு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிராவல் மண் கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
11-Dec-2024