உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 5 புதிய பேருந்துகள் இயக்கம்

5 புதிய பேருந்துகள் இயக்கம்

திருவள்ளூர் :திருவள்ளூர் திரு.வி.க., பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை - திருப்பதி எண். 201 பேருந்து வழித்தடத்திற்கு- 3, திருத்தணி, மெய்யூர் வழித்தடத்தில் தலா ஒன்று என, மொத்தம் 5 பேருந்துகள் இயக்கப்பட்டன.திருவள்ளூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ, ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை பொது மேலாளர் வெங்கடேசன், பணிமனை மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ