உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரு நாள் கூடும் சந்தையில் 5,000 ஆடுகள் குவிப்பு

ஒரு நாள் கூடும் சந்தையில் 5,000 ஆடுகள் குவிப்பு

பொதட்டூர்பேட்டை பொதட்டூர்பேட்டை அம்மன் ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கூடும் ஆட்டுச்சந்தை நேற்று நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதட்டூர்பேட்டையில், ஆவணி மாதம் நான்காம் வாரத்தில் ஆறு நாட்கள் ஜாத்திரை திருவிழா நடைபெறும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரட்டம்மன் வழிபாட்டுடன் ஜாத்திரை திருவிழா துவங்கியது. நேற்று, பொன்னியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாளை பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வேப்பிலை குடிலில் எழுந்தருளும் கங்கையம்மனுக்கு, கிராமத்தினர் கும்பம் படைக்க உள்ளனர். வேப்பிலை குடில் முன், அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடுகளை பலியிடுவது வழக்கம். இதற்காக, ஆடுகளை வாங்குவதில் பக்தர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் பொதட்டூர்பேட்டையில், ஆவணி நான்காம் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். பொதட்டூர்பேட்டை காவல் நிலையம் எதிரே, ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில், 5,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதட்டூர்பேட்டை பகுதிமக்கள், ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !