உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் 5.6 செ.மீ., மழை குளமானது கவரைப்பேட்டை

கும்மிடியில் 5.6 செ.மீ., மழை குளமானது கவரைப்பேட்டை

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. கனமழையால், கும்மிடிப்பூண்டியில் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை வெள்ளம் வெளியேற வழியின்றி தேங்கியது. குறிப்பாக, கவரைப்பேட்டை பஜார் பகுதியில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குளம்போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், கவரைப்பேட்டை பஜார் பகுதியில் மழைநீர் தேங்குவதால், நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். வடகிழக்கு பருவ மழைக்கு முன், கவரைப்பேட்டை பஜார் பகுதியில் உடனுக்குடன் மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இடம் மழையளவு (செ.மீ.,) ஊத்துக்கோட்டை 7.7 செங்குன்றம் 7.6 தாமரைப்பாக்கம் 6.7 ஆவடி 6.1 பூந்தமல்லி 5.7 சோழவரம் 5.7 கும்மிடிப்பூண்டி 5.6 பொன்னேரி 5.2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ