மேலும் செய்திகள்
அரசு பஸ் நடத்துனர் மயங்கி விழுந்து பலி
15-Oct-2024
மூதாட்டி சடலம் மீட்பு
02-Nov-2024
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் எல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 23. இவர் கடந்த 31ம் தேதி தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு சென்றார். எல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், அஜய், ஜீவா, சந்துரு, தர்மா, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரும், போதையில் பார்த்திபனை நிறுத்தி தாக்கினர். இதில் காயமடைந்த பார்த்திபனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
15-Oct-2024
02-Nov-2024