உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் 7 செ.மீ., மழை பதிவு

திருவாலங்காடில் 7 செ.மீ., மழை பதிவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக, திருவாலங்காடில் 7 செ.மீ., மழை பதிவாகியது. திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, அக்னி நட்சத்திரம் போல் வெயில் கொளுத்திய நிலையில், மாலை திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால், திருவள்ளூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருவாலங்காடில், 7 செ.மீ., மழை பதிவாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி