மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
26-Jul-2025
திருத்தணி:திருத்தணி தாலுகாவில் காலியாக உள்ள 11 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு, 756 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். திருத்தணி தாலுகா அலுவலகத்தில், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு கிராம உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. திருத்தணி தாலுகாவில், 11 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த மாதம் 23ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, தாசில்தார் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியுடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில், 756 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
26-Jul-2025