மேலும் செய்திகள்
தொல்காப்பியர் பாடல்களை எழுதுவதில் உலக சாதனை
05-Jun-2025
கும்மிடிப்பூண்டி, சர்வதேச யோகா தின விழாவில், 95 மாணவர்கள் தொடர்ந்து, ஐந்து நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், 11வது சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.கும்மிடிப்பூண்டி முன்னாள் சேர்மன் சிவகுமார் தலைமையில் நடந்த விழாவில், யோகா மைய பயிற்சியாளர் சந்தியா முன்னிலை வகித்தார்.நோபல் உலக சாதனை தலைமை நிர்வாக அலுவலர் அரவிந்தன், சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை சவுமியா நாராயணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு, பயிற்சி மையத்தை சேர்ந்த, 95 மாணவ - மாணவியர், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள், புஜங்காசனம் எனும் யோகாசனத்தில் உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை 'நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்தது.சாதனை படைத்த மாணவ - மாணவியர் மற்றும் பயிற்சியாளருக்கு உலக சாதனைக்கான சான்றுகள் வழங்கப்பட்டன.
05-Jun-2025