உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், நேற்று அதிகாலை கடம்பத்துார் - செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒருவர் இறந்து கிடப்பதாக, நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி பிரமோத்குமார் பஸ்வான் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார், விரைந்து வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சென்னை சென்ற புறநகர் மின்சார ரயலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், இறந்த ஆண் நபருக்கு 50 வயது இருக்கலாம் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி