உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடம்மாறும் இளைஞர்களை காக்க விளையாட்டு மைதானம் தேவை

தடம்மாறும் இளைஞர்களை காக்க விளையாட்டு மைதானம் தேவை

திருவாலங்காடு:திருவாலங்காடில், 1,000த்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், கிரிக்கெட், தடகளம், பூப்பந்து, டென்னிஸ் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.பலர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் பயிற்சி பெறுவதற்கான விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், விளையாடும் வாய்ப்பிழந்து, போதை பழக்கத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை