உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு மைதானத்தில் பயன்பாடில்லாத மின்விளக்கு

விளையாட்டு மைதானத்தில் பயன்பாடில்லாத மின்விளக்கு

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம், கிருஷ்ணமராஜகுப்பம் கிராமத்தின் கிழக்கில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வறண்டு கிடந்தது. 2015 முதல் ஆண்டு தோறும் நிரம்பி வருகிறது. ஏரி வறண்டு கிடந்த போது, கிராமத்து இளைஞர்கள் இந்த ஏரியில் விளையாடி வந்தனர். ஏரி நிரம்பியதும், இடம் மாற்றினர். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில், சோலார் மின்விளக்குடன் கூடிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த திடலை இளைஞர்கள் பயன்படுத்த முடியாதபடி, ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் நிரம்பி இருந்தது.தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆனாலும், விளையாட்டு திடலில் புல் முளைத்துள்ளது. இதனால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இங்கு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர்களை கவராத இந்த திடலில், கால்நடைகள் மேய்ச்சல் தடையின்றி தொடர்கிறது. ஏரியில் உள்ள மின்விளக்கை, தேவையான இடத்திற்கு மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும் என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை