நின்ற லாரி மீது லாரி மோதி வாலிபர் பலி
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள நிலக்கரி முனையத்தில் இருந்து, நேற்று கும்மிடிப்பூண்டிக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், கும்மனுார் பாலத்தின் மீது செல்லும்போது பழுதாகி நின்றது.பழுதான லாரியின் டிரைவருக்கு உதவுதற்காக, அதன் பின் வந்த மற்றொரு நிலக்கரி லாரியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு வண்டலுார் நோக்கி எய்ச்சர் லாரி ஒன்று வேகமாக பயணித்தது.மேற்கண்ட நிலக்கரி லாரிகள் நிற்பதை அறியாமல், இரண்டாவதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்கு உள்ளானது.இந்த விபத்தில் சுண்ணாம்பு ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி நொறுங்கியது. அதை ஒட்டி நடந்து வந்த மதுராங்கத்தை சேர்ந்த பார்திபன், 27, இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் எய்ச்சர் லாரியின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பார்த்திபனின் உடலை மீட்டனர்.செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பார்த்திபனின் உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.