உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகள்

நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசின் சாதனைகள்

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகள்:★ மாணவர்கள் களைப்பின்றி பயில கைகொடுக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால், நாளொன்றுக்கு 57,480 பேர் பயனடைந்து வருகின்றனர்.★ மகளிரின் பொருளாதார பயணத்துக்கு உதவும் விடியல் பயணம் வாயிலாக, 4,83,14,080 மகளிர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.★ மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 3,48,959 குடும்ப தலைவியர் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறுகின்றனர்.★ புதுமைப் பெண் திட்டத்தில், 9,988 மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.★ தமிழ்ப் புதல்வன் திட்டத்தில், 9,233 மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.★ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, 7,910 பேர் பயனடைந்து வருகின்றனர்.★ மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 6,06,644 பேர் பயனடைந்து வருகின்றனர்.★ 6,080க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 428.70 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டு உள்ளது.★ இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டத்தில், 7,101 பயனாளிகளும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக, 4,000 பேர் பயனடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ