உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடியும் நிலையில் வேளாண் கட்டடம் ராமசமுத்திரம் பகுதிவாசிகள் அச்சம்

இடியும் நிலையில் வேளாண் கட்டடம் ராமசமுத்திரம் பகுதிவாசிகள் அச்சம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் கிராமத்தில் ரேஷன் கடையை ஒட்டி, வேளாண் துறைக்கு சொந்தமான கட்டடம் பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டடத்தில் வேளாண் அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர். பின், அந்த கட்டடம் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது.இதையடுத்து, பராமரிப்பு இல்லாததால், பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேல்தளத்தின் கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது.வங்கனுாரில் இருந்து மத்துார் செல்லும் சாலையில், ராமசமுத்திரம் ரேஷன் கடையை ஒட்டி அமைந்துள்ள இந்த கட்டடத்தை தாண்டியே, ரேஷன் கடைக்கு பகுதிவாசிகள் செல்கின்றனர்.அபாய நிலையில் உள்ள கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்பதால், அப்பகுதியினர் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே, அப்பகுதியினரின் நலன் கருதி, இந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை