உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் பகலில் ஒளிரும் மின் விளக்குகள் மின்சாரம் வீணடிப்பதாக குற்றச்சாட்டு

சாலையில் பகலில் ஒளிரும் மின் விளக்குகள் மின்சாரம் வீணடிப்பதாக குற்றச்சாட்டு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை வழியே, தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதி நெடுஞ்சாலையில், மப்பேடு, சமத்துவபுரம் உட்பட பல பகுதியில் நெடுஞ்சாலையின் மீடியன் பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மின் விளக்குகள் பகலிலும் எரிவதால், மின்சாரம் வீணாவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் பகலில் ஒளிரும் உயர் கோபுர மின்விளக்குகளை அணைத்து வைத்து மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது மட்டும் தான் எங்கள் பணி. அந்த விளக்குகளை பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தான் மேற்கொள்ள வேண்டும்.மேலும், உயர்கோபுர மின்விளக்குகளை எரிய வைப்பதற்கு, மாலை 6:00 மணிக்கு எரிவது மற்றும் காலை 6:00 மணிக்கு அணைப்பது என, ஆட்டோமெட்டிக் சுவீட்ச் அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்..இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை