உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்கீடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்கீடு

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தவதற்காக தனித்தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிரதான நுழைவு வாயிலின் இடது புறம், அரசு வாகனம் மற்றும் அரசு அலுவலர்களின் அனுமதி சீட்டு பெற்ற வாகனம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.வலது புற நுழைவாயிலில் பொதுமக்களின் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் வலது புறம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தலாம். கலெக்டர் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மட்டும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில், நிறுத்த அனுமதிக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்களுக்கு தனியாக வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய இடத்தில் வாகனம் நிறுத்தாதோர் மீது காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தில், 500 பேர் அமரக்கூடிய கூட்டரங்கம் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. சுற்றுலா மாளிகையில் 1.53 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்படும். வளாகத்தில் உள்ள நான்கு குளங்களை சீரமைத்தும், பூங்கா மற்றும் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து கழிவறைகள் சீரமைக்கப்பட்டும், நான்கு பகுதியிலும் உள்ள நுழைவு வாயிலில் கால்நடைகள் வராத வகையில் 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ