உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு

அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் இ.என்.கண்டிகை கிராமத்தில் சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு இ.என்.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.நேற்று பட்டப்பகலில், அம்மன் கோவிலின் பூட்டு மற்றும் உண்டியல் உடைத்த மர்மநபர்கள், பணத்தை திருடிச் சென்றனர். உண்டியலில், 10,000 ரூபாய் இருக்கலாம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை