வாலிபர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது
பொன்னேரி, கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, ஒருவரை தேடி வந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 27. இவர், கடந்த 1ம் தேதி, பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாடு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், விமல்ராஜ் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, விமல்ராஜின் நண்பர் சிவா உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய, சிவாவின் சகோதரர் சக்தியை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த சக்தி, 27, நேற்று பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பொன்னேரி போலீசார் அவரை கைது செய்தனர்.