வி.ஏ.ஓ., ஆபீஸ் வளாகத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம்
ஆர்.கே.பேட்டை,ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் நடுவே பேருந்து நிலையம் அமைந்துள்ளது.பேருந்து நிலையத்தை ஒட்டி, மகளிர் சுய உதவி குழு கட்டடம், வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையம், கிளை நுாலகம் மற்றும் வங்கி உள்ளிட்டவை அமைந்துள்ளன.இந்நிலையில், வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தை ஒட்டியுள்ள குறுகிய சந்து பகுதியில், சமூக விரோதிகள் இரவு நேரத்தில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த வளாகத்தில், அசைவ உணவு சமைத்து, மது விருந்து நடத்தி வருகின்றனர். இதனால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.அதே இடத்தில், காலி மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். கிராமத்தில் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்த பகுதியில், இரவு நேரத்தில் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.