உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்

பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்

திருவள்ளூர்: ஊரக வளர்ச்சி துறையில் பழுதான வாகனங்கள், வரும் 10ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி உதவி இயக்கு நருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்கள், பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள், வரும் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு, ஊராட்சி உதவி இயக்கு நரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை