உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீஸ் வாகனங்கள் ஏலம்

போலீஸ் வாகனங்கள் ஏலம்

ஆவடி:ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் உள்ள அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலமும், துாரமும் கடந்த வாகனங்கள், கழிவு நீக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி, டாடா விக்டா - 2, டாடா ஸ்பாசியோ - 2, டாடா கிரான்டி - 1, டெம்போ டிராவலர் - 1 மற்றும் பைக் - 17 உட்பட, மொத்தம் 23 வாகனங்கள், ஆவடி கூடுதல் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் நவ., 11ம் தேதி காலை 9:00 மணியளவில், ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன.ஏலத்திற்கான முன்பதிவு நவ., 1 முதல் 5ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவு அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஆதார் அட்டை மற்றும் ஜி.எஸ்.டி., பதிவெண் கொண்ட சான்றுடன் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு 5,000 மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 2,000 முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான தொகையில் 75 சதவீதம், அன்றைய தினமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ