உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலையாற்றில் மணல் கொள்ளை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்

கொசஸ்தலையாற்றில் மணல் கொள்ளை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை பகுதியில் பாயும் கொசஸ்தலையாற்று பகுதியில், பொலிரோ கார் மற்றும் இருசக்கர வாகனம் வாயிலாக, ஆற்று மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது.குறிப்பாக, சவுக்கு தோப்பு உள்ள ஒரத்துார் - பாகசாலை இடையே உள்ள கொசஸ்தலையாற்றில், எல்.வி.புரம், ஒரத்துார், பாகசாலை, மணவூர் பகுதியை சேர்ந்தவர்கள், பொலிரோ கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக, இரவில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.இவர்கள், வாகனங்கள் வாயிலாக சேகரிக்கும் ஆற்று மணலை, ஓரிடத்தில் பதுக்கி வைத்து, பின் டிராக்டர் வாயிலாக, தேவையான இடங்களில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, ஒரத்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கொசஸ்தலையாற்றில், இரவு 10.30 மணிக்கு மேல் மணல் கொள்ளைக்கு வருவோர், அதிகாலை 4:00 மணி வரை மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தால், எங்களை அவர்களிடம் போட்டுக் கொடுத்து விடுகின்றனர்.மணல் கொள்ளையர்கள் வாயிலாக, காவல் துறையினருக்கு வருமானம் கிடைப்பதால், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை.வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், களத்திற்கு வருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் வருவதேயில்லை.இது குறித்து, மாவட்ட எஸ்.பி., கலெக்டர் ஆகியோர், உரிய நடவடிக்கை எடுத்து, மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Smbs
பிப் 02, 2025 02:39

அவன் உயிர் அவனுக்கு


அப்பாவி
பிப் 01, 2025 12:21

ஆத்துல மணல் இன்னும் இருக்காடா? இல்லே ஆழ்துளை போட்டு மணலை உறிஞ்சுறாங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை