உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / படம் வேண்டாம் அமைச்சரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

படம் வேண்டாம் அமைச்சரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, தமிழக வனத்துறை அமைச்சரும், தி.மு.க.,வின் துணை பொது செயலருமான பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும், ஹிந்து மதம் குறித்தும் இழிவுபடுத்தும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அவரது செயலை பல்வேறு கட்சியினர் கண்டித்து வருகின்றனர். பொன்னேரியில் நேற்று, பா.ஜ.,வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தின்போது, பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அமைச்சர் பொன்முடியின் உருவபடத்தை தீ வைத்து எதிர்ப்பை வெளிகாட்டினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி