உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுரவாயல் பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரவாயல் பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரவாயல்:மதுரவாயலில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் தேடுகின்றனர். சென்னை போலீஸ் நுண்ணறிவு பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர் மாநகராட்சி பூங்காவில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அது வெடிக்கும்' என பேசியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று மதுரவாயல் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் மொபைல் போன் எண்ணை வைத்து, அந்த நபர் யார், எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை