உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காதலியிடம் பணம் கேட்டு மிரட்டிய காதலனுக்கு வலை

காதலியிடம் பணம் கேட்டு மிரட்டிய காதலனுக்கு வலை

திருத்தணி:காதலித்த இளம்பெண்ணிடம், பணம் கேட்டு மிரட்டிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், சிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன், 31. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, 26 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், பிரவீனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, இரு குழந்தைகள் உள்ளனர் என்பதை அறிந்த இளம்பெண், பிரவீனிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், நேற்று முன்தினம், இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று, 'நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்' என மிரட்டியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, பிரவீனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை