மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு
05-Mar-2025
திருத்தணி:திருத்தணி சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 27; கால்டாக்சி ஓட்டுநர். இவருக்கு, சுவாதி, 25, என்ற மனைவியும், தட்சித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும், பிறந்து இரண்டு மாதங்களான பெண் குழந்தையும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு பசியால் அழுத பெண் குழந்தைக்கு, சுவாதி தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
05-Mar-2025