உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்புகள் இன்றி பால பணிகள் இரவு நேரத்தில் விபத்து அச்சம்

தடுப்புகள் இன்றி பால பணிகள் இரவு நேரத்தில் விபத்து அச்சம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே மாநில நெடுஞ்சாலையில் பாலப் பணிகள் நடக்கும் இடத்தில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் தடுப்புகள் ஏதும் இல்லாததால், இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அஞ்சுகின்றனர்.கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் சாலையில், ஈகுவார்பாளையம் - மாதர்பாக்கம் வரை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, இச்சாலையில் உள்ள சிறிய பாலங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.ஈகுவார்பாளையம் கிராம எல்லையில் உள்ள சிறுபாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் மாற்று பாதை இருந்த போதிலும், கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் வாகனங்கள் அச்சத்துடன் கடந்து வருகின்றன.அந்த இடத்தில் மேம்பால பணிகள் நடப்பதற்கான எச்சரிக்கை பலகை ஏதும் இல்லை. முக்கியமாக, வாகனங்கள் மாற்று பாதைக்கு திரும்ப ஏதுவாக, சாலையின் குறுக்கே தடுப்புகளும் இல்லை. இதனால், இரவு நேரத்தில், விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மாநில நெடுஞ்சாலை துறையினர், உடனடியாக சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், ஒளிரும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ