உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாதனை சிறுமியருக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

சாதனை சிறுமியருக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்:பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சேவையாற்றி, சாதனை படைத்த சிறுமியர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, திருவள்ளூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும், 13 - 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஆண்டு தோறும் தேசிய பெண் குழந்தை தினமான, ஜன.,24ல் மாநில அரசின் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு விருது பெற விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 13 -18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்ற சாதனை செய்திருக்க வேண்டும். மாநில அளவில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படும். விண்ணப்பத்தை https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில், நவ.29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஆவணங்களை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி