உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொன்னாங்குளம் பகுதிவாசிகள் அச்சம்

பழுதான குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொன்னாங்குளம் பகுதிவாசிகள் அச்சம்

மணவூர்:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்து அமைந்துள்ளது பொன்னாங்குளம் கிராமம். இங்கு 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகள், பயன்பாட்டிற்காக மணவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ளது.இதன் நான்கு துாண்களும், விரிசல் அடைந்து, மோசமான நிலையில் உள்ளது. மேலும், குடிநீர் தொட்டியின் மேற்புறமும் மிகவும் பழுதடைந்துள்ளது.குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் அவ்வப்போது உதிர்ந்து வருகிறது. இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறித்து, பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை