உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பது சகஜமாக நடந்து வருகிறது. போலீசார் தீவிர சோதனை செய்து, அவ்வப்போது கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறது. ஆனாலும், தொடர்ந்து கஞ்சா விற்பது தொடர்கிறது.இதில் குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று முன்தினம், வெள்ளியூர் அரசு பள்ளி அருகே, கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 21, என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்தவரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை