நெடுஞ்சாலையில் தீக்கிரையான கார்
பூந்தமல்லி, பூந்தமல்லியில் நெடுஞ்சாலையில் சென்ற கார், தீப்பற்றி எரிந்து நாசமானது. நொளம்பூரில் இருந்து நேற்று ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்ற 'மஹிந்திரா எக்ஸ்யூவி' கார், பூந்தமல்லி பகுதியை கடந்த போது, காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது. சுதாரித்த கார் ஓட்டுநர் ஆறுமுகம், சாலையோரம் காரை நிறுத்தினார். ஆறுமுகம் மற்றும் காரில் பயணித்தவர், உடனே காரில் இருந்து இறங்கி தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.