கார்கள் மோதல் தம்பதி படுகாயம்
திருத்தணி:திருத்தணி அடுத்த, தணிகைபோளூர் மேட்டுக் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 29; இவர், நேற்று முன்தினம், மனைவி ரேவதி, 23, என்பவருடன், 'மாருதி ஷிப்ட்' காரில், திருத்தணியில் இருந்து, சோளிங்கர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். காரை விஜயகுமார் ஓட்டிச் சென்றார்.திருத்தணி - சித்துார் சாலை, தலையாறிதாங்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் வந்த, 'மாருதி ஷிப்ட் டிசைனர்' கார், மோதியது. இதில், விஜயகுமார் ஓட்டிச் சென்ற கார், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், விஜயகுமார் அவரது மனைவி, ரேவதி படுகாயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள், தம்பதியினரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.