மேலும் செய்திகள்
வங்கி முன் நிறுத்தியிருந்த டூ-வீலர் திருட்டு
24-Nov-2024
திருத்தணி,:திருத்தணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் டில்லிபாபு, 42. இவர் திருத்தணி கந்தசாமி தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வியாபாரம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, சாலையின் குறுக்கே, திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெரு சேர்ந்த நாகூர்பிச்சை மகன் முகமதுயூசப் அலி,20 என்பவர் மதுபோதையில், தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அவ்வழியாக வருபவர்களிடம் தகராறு செய்து வந்தார்.அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவுக்கு வழிவிடாமல் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த போது, டில்லிபாபு அங்கு வந்து, சாலையின் குறுக்கே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்து ஆட்டோவிற்கு வழிவிட்டார்.இதற்கு முகமதுயூசப் அலி, டில்லிபாபுவிடம், 'என் வாகனத்தை எடுத்து எப்படி வழிவிடலாம், உன்னை கொலை செய்துவிடுவேன்' என, மிரட்டி சென்றார்.இந்நிலையில் நேற்று மதியம், 2:00 மணியளவில் டில்லிபாபு கடையில் இருந்த போது, முகமதுயூசப் அலி தனது நண்பர்கள் மூன்று பேருடன் வந்து தகராறு செய்தும், முகமதுயூசப் அலி மறைத்து வைத்திருந்த கத்தியால், டில்லிபாபுவின் தலை மற்றும் இடது கையில் சராமரியாக வெட்டிவிட்டு நால்வரும் தப்பிச் சென்றனர். டில்லிபாபு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து நால்வரை தேடி வருகின்றனர்.★★
24-Nov-2024