மேலும் செய்திகள்
பாம்பு கடித்து மூதாட்டி பலி
23-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, சேலை கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி சரஸ்வதி, 49. சென்னையில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவரது மகன் சாய்ராம், சற்று மனநலம் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.கோவில் கட்டுவதில் சரஸ்வதிக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இதையடுத்து, கடந்த 31ம் தேதி, இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் சுமதி, 50, மோகன்ராஜ், 30, சரண்யா, 28 ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு வந்து சரஸ்வதி வீட்டில் இல்லாத நேரத்தில் சாய்ராமை, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் சுமதி, மோகன்ராஜ், சரண்யா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Jan-2025