உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழையில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு

மழையில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு

பொன்னேரி: பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மாதம் வீசிய மிக்ஜாம் புயல் மழையின்போது, வேம்பேடு, ஆவூர், கோளூர், அண்ணாமலைச்சேரி, தேவம்பட்டு, மாங்கோடு உள்ளிட்ட கிராமங்களில், 25மாடுகள், இரண்டு கிடாரி கன்றுகள், 20 ஆடுகள், 100க்கும் அதிகமான கோழிகள் மழைநீரில் சிக்கி உயிரிழந்தன.புயலில் இறந்த கால்நடைகளுக்கு, இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேற்கண்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.ஒரு மாதத்திற்குமேல் ஆன நிலையில், இதுவரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. தொடர்ந்து வருவாய் மற்றும் கால்நடைத்துறை அலுவலங்களுக்கு விவசாயிகள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சஙகத்தினர் பொன்னேரி சப் கலெக்டரிடம் மனு அளித்து உள்னர்.இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சி.ராமு தெரிவித்ததாவது:புயல் மழையில் சிக்கி கால்நடைகள் இறந்தது உண்மை என வருவாய்த்துறையினர் அறிக்கை அளித்துவிட்டனர். கால்நடை மருத்துவர் இறப்பு சான்றும் வழங்கிவிட்டார். ஆனால் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. புயலின்போது இறந்த கால்நடைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை அளிக்காததால் பணம் வரவில்லை என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை தராதது, கால்நடைத்துறையினர் தவறு, அதனால் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை