சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி உலா வரும் கால்நடைகள்
பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் அடுத்தடுத்து அமைந்துள்ள இந்த பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், அரசு உயர்நிலை பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் இன்றி முள்வேலி போடப்பட்டுள்ளது. இந்த வழியாக ஆடு, மாடு உள்ளிட்டவை எளிதாக பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால், பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.எனவே, மாணவர்களின் நலன் கருதி, அரசு உயர்நிலை பள்ளியின் சுற்றுச்சுவரை முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.