உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பி.டி.ஓ., அலுவலகத்தில் சிசிடிவி பழுது இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு

பி.டி.ஓ., அலுவலகத்தில் சிசிடிவி பழுது இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு

திருத்தணி: திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளதால், அலுவலக ஊழியர்கள், பயனாளி களின் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர, 27 ஊராட்சிகளில் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் அரசு நலதிட்ட உதவிகள் பெறுவதற்கு வந்து செல்கின்றனர். அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்களில் அலுவலகத்திற்கு வருகின்றனர். மேலும் அரசு வழங்கும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு இரும்பு கம்பிகள், சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்கள் வழங்குவதற்கு ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைத்துள்ளனர். ஒன்றிய அலுவலகத்தின் கீழ்தளம், முதல் தளம் மற்றும் அலுவலக வளாகம் ஆகிய, 9 இடங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண் காணிப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் பழுதானதால் மர்ம நபர்கள் அலுவலகத்தில் நுழைந்து இரு சக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர். கடந்த இரு மாதத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இரு வாகனங்கள் திருடு போய் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 'சிசிடிவி' பழுதாகியுள்ளதால் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதாகியுள்ள கேமராக்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ