மேலும் செய்திகள்
விநாயகர் கோவில்களில்சங்கடஹர சதுர்த்தி பூஜை
19-Dec-2024
திருவள்ளூர்:திருவள்ளூரில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, இன்று, விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.இன்று சதுர்த்தியை முன்னிட்டு முன்னிட்டு, திருவள்ளூர், ரயிலடி வழித்துணை விநாயகர் கோவில், ஆயில் மில் அரச மரத்தடி விநாயகர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில் வரசித்தி விநாயகர் கோவில், பூங்கா நகர், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர் கோவில், பேரம்பாக்கம சோளீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் கோவிலில், அபிேஷகம் செய்யப்படும்.மேலும், திருவள்ளூர் பெரியகுப்பம், மீனாட்சி நகரில், காரிய சித்தி கணபதி கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பில் மகா வல்லப கணபதி கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் உள்ள 11 விநாயகர்கள் கொண்ட விநாயகர் சபை உட்பட மாவட்டம் முழுதும் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.
19-Dec-2024